• EPS-க்கு மீண்டும் திகில் காட்டும் செங்கோட்டையன், BJP-க்கும் ஷாக்? | Elangovan Explains
    Sep 2 2025

    'வருகிற செப்டம்பர் 5-ல் மனம் விட்டு பேசப் போகிறேன்' என மீண்டும் எடப்பாடிக்கு திகில் காட்டும் செங்கோட்டையன். மீண்டும் அதிமுகவில் பிளவா...அல்லது ஒருங்கிணைப்பு முயற்சியா?

    இதற்குப் பின்னணியில் சசிகலாவின் கேம் உள்ளது. குறிப்பாக அவரோடு கைகோர்த்து இருக்கிறார்கள் 'ஓபிஎஸ் & டிடிவி'. முக்கியமாக விஜயின் வருகை அதிமுகவுக்கும் நெருக்கடி கொடுத்துள்ளது. இன்னொரு பக்கம், பிஜேபிக்கு ஷாக் கொடுத்த டிடிவி. பரபரப்பான சதுரங்க ஆட்டம்.

    Show More Show Less
    20 mins
  • 'முதுகில் குத்திய EPS' Premalatha அட்டாக், பின்னணியில் Stalin! | Elangovan Exoplains
    Sep 1 2025

    'எங்கள் முதுகில் குத்தி விட்டார் எடப்பாடி' என பிரேமலதா அட்டாக். அன்புமணிக்கு விடுத்த கெடு முடிந்துள்ளது. என்ன நடவடிக்கை எடுப்பது என ஒழுங்கு நடவடிக்கை குழு ராமதாஸிடம் அறிக்கை சமர்பிப்பு. செப்டம்பர் மூன்றில் இது சம்பந்தமாக பேசுவதாக தெரிவித்துள்ளார். இதில் அன்புமணியை இடைக்காலமாக நீக்க ராமதாஸ் திட்டம் என தகவல். இன்னொரு பக்கம் மாநாட்டை தள்ளி வைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கு பதில் தென் மாவட்ட சுற்றுப்பயணம், மாஜிக்கள. தொகுதியில் வலிமையான வேட்பாளரை நிறுத்துவது என ஒரு 50 தொகுதிகளை பட்டியலெடுத்து பயணிக்க திட்டம். இந்த மூவருமே மு.க ஸ்டாலின் வகுத்துக் கொடுத்த சூத்திரத்தின் அடிப்படையில் அல்லது ஆதரவின் அடிப்படையில் இயங்குகிறார்கள். இதை வைத்து லாபக் கணக்கு போடும் ஸ்டாலின் என்கிறார்கள் உள் விவரங்களை நன்கறிந்தவர்கள்.

    Show More Show Less
    18 mins
  • 'EPS-க்காக, Annamalai சபதம், DMDK-உடன் கே.என் நேரு டீல்! | Elangovan Explains
    Aug 30 2025

    ஜி.கே மூப்பனார் நினைவு நாளில், எடப்பாடியிடம் கூடுதல் அன்பை பகிர்ந்த அண்ணாமலை. அவருக்கு ஒரு சத்தியமும் செய்து தந்திருக்கிறார் என தகவல். கூட்டணிக் கட்சிகளை தக்க வைக்க எ.வ வேலுவிடமும், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர கே.என் நேருவிடமும் இரண்டு அசைன்மெண்டுகள் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின். அதற்கேற்ப தேமுதிகவுடன் பேசி வருகிறார் கே.என் நேரு. இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து காங்கிரஸில் உருவாகி இருக்கும் புரட்சி படை. இதை எதிர்த்து போர்க்கொடி தூக்கும் திமுக. ஸ்டாலினுக்கு ஷாக். இதேபோல அதிமுகவில், புதிதாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட, 'பவரை குறைக்க போகிறீர்களா பழனிசாமி?' என கொதிக்கும் மா.செ-க்கள்.

    Show More Show Less
    17 mins
  • 'Stalin தான் CM, ஆனால் ஆட்சியில் ADMK? EPS நூறும், ஸ்டாலின் எட்டும்! | Elangovan Explains
    Aug 29 2025

    திமுக தலைவராக பொறுப்பேற்று எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மு.க ஸ்டாலின். தொடர்ந்து பதினோரு வெற்றிகள், ஏழு ஆண்டாக உடையாத கூட்டணி, பல்வேறு நலத்திட்டங்கள் என பாசிட்டிவ் பல.

    அதே நேரம், அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் அதிக இடம், மாவட்டம்தோறும் கோஷ்டி பூசல்கள் என நெகட்டிவ்களும் நெருக்கடி கொடுக்கின்றன. ஆளும் கட்சியில் இப்படி என்றால் ஆளத் துடிக்கும் அதிமுக-விலோ, நூறு தொகுதிகளுக்கு விசிட் அடித்து விட்டு திரும்பி உள்ளார் எடப்பாடி.

    ஈசல்கள் போல பெரும் கூட்டம், பிரம்மாண்டமான வரவேற்பு, அள்ளி வீசிய வாக்குறுதிகள் என பட்டையை கிளப்பிய சுற்றுப்பயணம்.

    அதே நேரத்தில், மாஜி-க்களின் தனி தர்பார், பாஜக-வுக்கு காவடி தூக்கியது, ஏனைய கூட்டணிக் கட்சியினரை அரவணைக்காமல் சென்றது என ஏராளமான சொதப்பல்கள். ஸ்டாலினின் ஏழு ஆண்டும், எடப்பாடியின் 100 தொகுதியும்... சாதித்ததும் சறுக்கியதும் என விரிவான பின்னணிகள்.

    Show More Show Less
    22 mins
  • 'ADMK-வை வழிநடத்தும் RSS?' EPS-க்கு தலைவலி மேல் தலைவலி! | Elangovan Explains
    Aug 28 2025

    'தினந்தோறும் DMK அட்டாக்' இதுதான் அன்புமணிக்கு, டெல்லி தந்த ஸ்கிரிப்ட்.

    ராமதாஸை, திமுக இயக்குகிறது என அன்புமணி டவுட். இதற்கு செக் வைக்க காடுவெட்டி குரு குடும்பத்தை களம் இறக்கும் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என அமித் ஷா அப்செட். அதையொட்டி எடப்பாடிக்கு தந்திருக்கும் மெசேஜ். இதனால் அவர் ஷாக்.அடுத்த அட்டாக்காக எல்.முருகனின் அதிமுக மீதான ஆர்.எஸ்.எஸ் முத்திரை. இதற்கு செல்லூர் ராஜூவை வைத்து சமாளித்த எடப்பாடி.

    Show More Show Less
    17 mins
  • Bihar-ல் Stalin, அதிர்ச்சியில் Amit shah,10 வெடிகள்! | Elangovan Explains
    Aug 27 2025

    'வாக்கு திருட்டு' அரசியலை கையிலெடுத்து, தொடர் பேரணிகளை பீகாரில் முன்னெடுத்து வருகிறார் ராகுல். இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த பேரணியில் கை கோர்த்துள்ளார் மு.க ஸ்டாலின். இதற்கு பின்னால் பாஜகவுக்கு வடக்கிலும் அடி கொடுக்க வேண்டும், இந்தியா கூட்டணியின் பலத்தை உணர்த்த வேண்டும், தன்னுடைய அகில இந்திய இமேஜை உயர்த்திக் கொள்ள வேண்டும் என பல்வேறு கணக்குகள் உள்ளது.

    இன்னொரு பக்கம், பாஜகவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களையும் ஒருங்கிணைத்து வலுவான அடி கொடுக்கும் அரசியலை தீவிரப்படுத்தி வருகிறார் ராகுல். அதிலும் ஒன்றாக சவுத்-நார்த் என அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது பாஜக என்பதை சவுத் முதலமைச்சர்களை பங்கேற்க வைப்பதன் மூலம் உணர்த்துகிறார். 'ராகுல் - ஸ்டாலினின்' இந்த 'பீகார் பவர் பிளேவை' புரிந்து கொண்டு, பதவி பறிப்பு மசோதா மற்றும் இந்திக்கு எதிரானவர் ஸ்டாலின் என்கிற அரசியலை தீவிரமாக முன்னெடுக்கிறது அமித் ஷாவின் டீம். அனல் மூட்டுகிறது பீகார் சம்பவம்.

    Show More Show Less
    16 mins
  • Annamalai-யால், EPS ஹேப்பி, ஆனால் பயம் காட்டும் Amit shah? | Elangovan Explains
    Aug 26 2025

    வாக்குத்திருட்டு அரசியலை கையிலெடுத்து இருக்கும் ராகுல். அதற்கு பதிலடி கொடுக்க பதவிப்பறிப்பு மசோதாவை எடுத்து வீசும் அமித்ஷா. வெற்றி கிடைக்காது என அறிந்தும் இதை தீவிரமாக முன்னெடுக்கிறார் அமித்ஷா. காரணம் இந்தியா கூட்டணி, திமுக உள்ளிட்டவர்களின் இமேஜை உடைக்க இதை பயன்படுத்துகிறார் என்கிறார்கள். இதில் அதிக வழக்குகளில் சிக்கிய முதலமைச்சர்கள், எம்பிக்கள், மந்திரிகள், எம்எல்ஏக்கள் என்கிற புள்ளி விவரங்கள், பாஜகவையும் பதம் பார்க்கக் கூடியதாகவும் உள்ளது.

    இந்தியா கூட்டணியின் இமாலய கோட்டையை தகர்க்குமா அமித்ஷாவின் பிரம்மாஸ்திரம் ?

    அடுத்து, 'அவரை முதலமைச்சராக உயிரையும் கொடுப்பேன்' என எடப்பாடியை ஆச்சரியப்படுத்தும் அண்ணாமலை ஆனாலும் 'கூட்டணி ஆட்சி' என அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கும் அமித் ஷா.

    Show More Show Less
    18 mins
  • 'நக்சல் ஆதரவாளரா சுதர்சன்?' அமித் ஷா-வுக்கு ஷாக் தரும் ஸ்டாலின்! | Elangovan Explains
    Aug 25 2025

    'சுதர்சன் ரெட்டி நக்சல் ஆதரவாளர்' என அட்டாக் செய்துள்ளார் அமித்ஷா. 'அவர் சட்டத்தை பாதுகாக்கின்றவர்' என ஸ்டாலின் பதிலடி. இதில் ஸ்டாலினுக்கு எதிராக செந்தில் பாலாஜியை குறி வைத்து, மூன்று அஸ்திரங்களை ஏவும் அமித் ஷா. அதே பாணியில் திருப்பி அடிக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம், எடப்பாடியை அலற வைக்கும் 'ஆம்புலன்ஸ் அரசியல்'. ரோடு ஷோ கலாச்சாரம் அவசியமா?

    Show More Show Less
    15 mins