The Political Pulse | Hello vikatan cover art

The Political Pulse | Hello vikatan

The Political Pulse | Hello vikatan

By: Hello Vikatan
Listen for free

About this listen

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" PodcastHello Vikatan Political Science Politics & Government
Episodes
  • 'முதுகில் குத்திய EPS' Premalatha அட்டாக், பின்னணியில் Stalin! | Elangovan Exoplains
    Sep 1 2025

    'எங்கள் முதுகில் குத்தி விட்டார் எடப்பாடி' என பிரேமலதா அட்டாக். அன்புமணிக்கு விடுத்த கெடு முடிந்துள்ளது. என்ன நடவடிக்கை எடுப்பது என ஒழுங்கு நடவடிக்கை குழு ராமதாஸிடம் அறிக்கை சமர்பிப்பு. செப்டம்பர் மூன்றில் இது சம்பந்தமாக பேசுவதாக தெரிவித்துள்ளார். இதில் அன்புமணியை இடைக்காலமாக நீக்க ராமதாஸ் திட்டம் என தகவல். இன்னொரு பக்கம் மாநாட்டை தள்ளி வைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கு பதில் தென் மாவட்ட சுற்றுப்பயணம், மாஜிக்கள. தொகுதியில் வலிமையான வேட்பாளரை நிறுத்துவது என ஒரு 50 தொகுதிகளை பட்டியலெடுத்து பயணிக்க திட்டம். இந்த மூவருமே மு.க ஸ்டாலின் வகுத்துக் கொடுத்த சூத்திரத்தின் அடிப்படையில் அல்லது ஆதரவின் அடிப்படையில் இயங்குகிறார்கள். இதை வைத்து லாபக் கணக்கு போடும் ஸ்டாலின் என்கிறார்கள் உள் விவரங்களை நன்கறிந்தவர்கள்.

    Show More Show Less
    18 mins
  • 'EPS-க்காக, Annamalai சபதம், DMDK-உடன் கே.என் நேரு டீல்! | Elangovan Explains
    Aug 30 2025

    ஜி.கே மூப்பனார் நினைவு நாளில், எடப்பாடியிடம் கூடுதல் அன்பை பகிர்ந்த அண்ணாமலை. அவருக்கு ஒரு சத்தியமும் செய்து தந்திருக்கிறார் என தகவல். கூட்டணிக் கட்சிகளை தக்க வைக்க எ.வ வேலுவிடமும், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர கே.என் நேருவிடமும் இரண்டு அசைன்மெண்டுகள் கொடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின். அதற்கேற்ப தேமுதிகவுடன் பேசி வருகிறார் கே.என் நேரு. இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து காங்கிரஸில் உருவாகி இருக்கும் புரட்சி படை. இதை எதிர்த்து போர்க்கொடி தூக்கும் திமுக. ஸ்டாலினுக்கு ஷாக். இதேபோல அதிமுகவில், புதிதாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட, 'பவரை குறைக்க போகிறீர்களா பழனிசாமி?' என கொதிக்கும் மா.செ-க்கள்.

    Show More Show Less
    17 mins
  • 'Stalin தான் CM, ஆனால் ஆட்சியில் ADMK? EPS நூறும், ஸ்டாலின் எட்டும்! | Elangovan Explains
    Aug 29 2025

    திமுக தலைவராக பொறுப்பேற்று எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மு.க ஸ்டாலின். தொடர்ந்து பதினோரு வெற்றிகள், ஏழு ஆண்டாக உடையாத கூட்டணி, பல்வேறு நலத்திட்டங்கள் என பாசிட்டிவ் பல.

    அதே நேரம், அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் அதிக இடம், மாவட்டம்தோறும் கோஷ்டி பூசல்கள் என நெகட்டிவ்களும் நெருக்கடி கொடுக்கின்றன. ஆளும் கட்சியில் இப்படி என்றால் ஆளத் துடிக்கும் அதிமுக-விலோ, நூறு தொகுதிகளுக்கு விசிட் அடித்து விட்டு திரும்பி உள்ளார் எடப்பாடி.

    ஈசல்கள் போல பெரும் கூட்டம், பிரம்மாண்டமான வரவேற்பு, அள்ளி வீசிய வாக்குறுதிகள் என பட்டையை கிளப்பிய சுற்றுப்பயணம்.

    அதே நேரத்தில், மாஜி-க்களின் தனி தர்பார், பாஜக-வுக்கு காவடி தூக்கியது, ஏனைய கூட்டணிக் கட்சியினரை அரவணைக்காமல் சென்றது என ஏராளமான சொதப்பல்கள். ஸ்டாலினின் ஏழு ஆண்டும், எடப்பாடியின் 100 தொகுதியும்... சாதித்ததும் சறுக்கியதும் என விரிவான பின்னணிகள்.

    Show More Show Less
    22 mins
No reviews yet
In the spirit of reconciliation, Audible acknowledges the Traditional Custodians of country throughout Australia and their connections to land, sea and community. We pay our respect to their elders past and present and extend that respect to all Aboriginal and Torres Strait Islander peoples today.