• Article 370 tamil audio book
    Aug 23 2024

    Book overview மகாராஜா ஹரி சிங் எதன் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மிரை இணைக்க ஒப்புக்கொண்டார்? ஆர்ட்டிகிள் 370 என்பது என்ன? காஷ்மிருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது? காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? அதைப் பின்வாங்கிக் கொள்வது காஷ்மிருக்கு இழைக்கப்படும் துரோகமா? இந்தியாவின் காஷ்மிர் தனியாக ஒரு நாடு போல் இயங்க ஆர்டிகிள் 370 அனுமதித்ததா? ஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா காலம் தொடங்கி, இந்திய அரசியல் வரலாற்றில் காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து குறித்து நடந்த விவாதங்கள் என்ன? அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இந்தப் புத்தகம். பல்வேறு தரவுகளுடன், தொடக்கம் முதல் இறுதி வரை எங்கும் விலகிச் செல்லாமல், இந்தப் புத்தகத்தைக் கோர்வையாக, திறம்பட எழுதி இருக்கிறார் ஆர்.ராதாகிருஷ்ணன். Nandri Swasam publications

    Show More Show Less
    3 mins
  • சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது
    Aug 23 2024

    Download free app Aurality tamil audio platform https://play.google.com/store/search?q=aurality&c=apps download chozha sooriyan - part 1 tamil audiobook https://play.google.com/store/audiobooks/details/Siraa_Choza_Sooriyan?id=AQAAAEAyEVZRdM Book Publisher: Swasam Audio book by Aurality/ tamilaudiobooks.com Itsdiff Entertainment Title: Choza Sooriyan Part 1 Subtitle: சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் Description சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் - Part 1 சோழ இளவரசனான உத்தம சீலியுடன் நடந்த யுத்தத்திற்குப் பின், பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் வீரபாண்டியன். ஒரு போருக்குப் பின் ஒரு மன்னன் தன் நாட்டை மீட்டெடுப்பது அத்தனை சுலபமல்ல. அது எத்தனை கடினமானது என்பதை, கற்பனை கலந்து கல்வெட்டுத் தரவுகளுடன் எழுதி இருக்கிறார் சிரா. சோழனோ பாண்டியனோ, தோல்வியுற்ற மன்னனுக்கும் பெரிய நாடு இருக்கும். அவனைக் கடவுள் என்று கொண்டாடிய மனிதர்கள் இருப்பார்கள். ஒரு போரில் தோல்வியுற்றான் என்ற காரணத்துக்காக அந்த மன்னன் வீரம் இல்லாதவன் என்று அர்த்தமில்லை. ஒரு மாபெரும் அரசனைத் துணிவுடன் எதிர்த்து நிற்க இன்னொரு மாவீரனால்தான் முடியும். அப்படி சோழம் என்ற ஒரு பெரும் தேசத்தை எதிர்க்கத் துணிந்த ஓர் உன்னத வீரனைப் பற்றிய கதை இது. பல்வேறு ஆதாரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் சுவராஸ்யமான வரலாற்று நாவல். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். A proud Aurality production Author: Siraa Narrator: Pushpalatha Parthiban Book Published

    Show More Show Less
    17 mins
  • ஓவியம், சிற்பம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றிற்குப் பல்லவர்கள் கொடுத்த முக்கியத்துவம்
    Aug 23 2024

    download free app - aurality today via play store and app store https://play.google.com/store/search?q=aurality&c=apps Title: Eliya Tamilil Pallavar Varalaaru Subtitle: எளிய தமிழில் பல்லவர் வரலாறு Eliya Tamilil Pallavar Varalaaru (Moolam: Rasamanikkanar): An Aurality Tamil Audiobook Production எளிய தமிழில் பல்லவர் வரலாறு (மூலம்: இராசமாணிக்கனார்) மா.இராசமாணிக்கனாரின் மூல நூல் இந்தத் தலைமுறையினருக்குப் புரியும் வகையில் இக்காலத் தமிழ்நடையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. பல்லவர்களின் வரலாற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள இதுபோன்ற இன்னொரு நூல் இல்லை எனலாம். சோழர்களுக்கு முன்பாகத் தமிழ் நிலத்தின் பெரும்பரப்பை, ஏறத்தாழ 600 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். சோழர்களின் காலத்தில் தமிழகக் கட்டடக் கலை உச்சம் தொட்டது என்றாலும், அதற்கான அடித்தளத்தை ஆழமாக இட்டவர்கள் பல்லவர்களே. தமிழ் நிலத்தில் முதன்முதலில் கருங்கற்கள் கொண்டு கோவில் எழுப்பிய பல்லவர்கள், செங்கற்களால் கட்டப்பட்ட கோவில்களைக் கருங்கற்களால் புதுப்பிக்கவும் செய்தார்கள். இதனைச் சான்றுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர். பல்லவர் கால நீர் மேலாண்மை, காஞ்சி மாநகரின் அருமை, சைவ – வைணவ மதங்களின் எழுச்சி, சமண – பௌத்த மதங்களின் வீழ்ச்சி, பல்லவர்கள் மேற்கொண்ட போர்கள், அதன் விளைவுகள், அக்காலப் பஞ்சங்கள்; ஓவியம், சிற்பம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றிற்குப் பல்லவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அக்கால சமூகப் பொருளாதார நிலைகள், பல்லவர்களின் வீழ்ச்சி போன்றவை இந்தப் புத்தகத்தில் அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விவரிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் அச்யுதன் ஶ்ரீ தேவ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: Achyutan Shree Dev Narrator: Sukanya Karunakaran Book Publisher: Swasam Audio book by Aurality/ tamilaudiobooks.com Itsdiff Entertainment

    Show More Show Less
    24 mins
  • பத்மநாபா படுகொலை - தமிழ் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை, மக்களுக்காகத்தான் மண்ணை நேசிக்கிறேன்
    Aug 23 2024

    Title: Padmanabha Padukolai listen on https://play.google.com/store/apps/details?id=com.itsdiff.aurality&hl=en_US download on google play - https://play.google.com/store/audiobooks/details/J_Ramki_Padmanabha_Padukolai?id=AQAAAEAyhVTFdM Subtitle: பத்மநாபா படுகொலை Padmanabha Padukolai / பத்மநாபா படுகொலை An Aurality Tamil Audiobook Production ஆயுதமேந்திய குழுவொன்று வீடு புகுந்து பட்டப்பகலில் 14 பேரைச் சுட்டுக்கொன்ற சம்பவம், தமிழ்நாட்டிற்குப் புதிது. அதுவரை தமிழர்கள் ஏ.கே 47 துப்பாக்கியைத் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது பத்மநாபாவின் படுகொலை. இது சகோதர யுத்தம் மட்டுமல்ல. கள்ளத்தோணியில் வந்திறங்கி, கச்சிதமாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலை. கோடம்பாக்கத்தின் ஜக்காரியா காலனியை ரத்தச் சகதியாக்கிவிட்டு கொலைகாரர்கள் தப்பிச் சென்றது, தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்த கரும்புள்ளி. இந்தக் கொலையாளிகளைத் தேடிப் பிடித்திருந்தால், ராஜிவ் காந்தி படுகொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். 38 வயதில் பரிதாபமாகக் கொல்லப்பட்டார் பத்மநாபா. ஆயுதமேந்தித்தான் பத்மநாபாவும் போராடினார் என்றாலும், அவரது கரங்களில் ரத்தக்கறை இருந்திருக்கவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தவொரு சாதாரண வழக்கிலும் கூட அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லீம்கள் என அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவும் பத்மநாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு அன்று இருந்தது. தொலைநோக்குச் சிந்தனையாளர். சர்வதேச அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டவர். ‘தமிழ் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை, மக்களுக்காகத்தான் மண்ணை நேசிக்கிறேன்’ என்றவரை இனத்துரோகி என்றார்கள். எழுத்தாளர் J. Ramki எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: J. Ramki Narrator: Pushpalatha Parthiban Publisher: Audiobook by Aurality / Itsdiff Entertainment ebook by Swasam

    Show More Show Less
    9 mins
  • மகிழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. எதிர்பார்ப்புகளுக்கும் நிராசைகளுக்கும் பஞ்சமில்லை
    Aug 23 2024

    https://play.google.com/store/audiobooks/details/R_Venkatesh_Thirattuppaal?id=AQAAAEAyURcRNM download free app - aurality today via play store and app store https://play.google.com/store/search?q=aurality&c=apps Title: Thirattuppaal Subtitle: திரட்டுப்பால் Series Name: Not Set Series Entry: Not Set Description: நகரவாழ் மத்தியத் தர வர்க்கம் என்பது படைப்புக்கான தலைக்காவிரி. தொடும் இடங்கள் எல்லாம் பாத்திரங்களும் காட்சிகளும் நிறைந்தவை. வலிகளுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. எதிர்பார்ப்புகளுக்கும் நிராசைகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களும் இந்தக் காவிரியில் இருந்து சிறுக சிறுக முகர்ந்து வழங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுப்பிரமணிய ராஜூ வழிவந்தவரான ஆர்.வெங்கடேஷும் அதே முயற்சியையே இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார். நேரடி சம்பவங்களோடு, மனவோட்டம் சார்ந்த சொற்சித்திரம் தீட்டும் பாணியைப் பின்பற்றும் ஆர்.வெங்கடேஷ், எங்கும் குரல் உயர்த்திப் பேசுவதில்லை. வாழ்க்கையின் சில துண்டுகளை இணைத்து, கோவையாக்குவதன் வாயிலாக, கதாபாத்திரங்களில் உள்ளூர ஊசலாடும் மனச்சிக்கல்களுக்கு, எழுத்து வடிவம் தர முயற்சி செய்துள்ளார். மத்தியத் தர வர்க்கத்தின் மீதான எந்தவிதமான விமர்சனத்தையோ, தீர்ப்புகளையோ முன்வைக்காமல், அதன் போக்கை முடிந்தவரை அப்படியே பதிவு செய்வது, ஆர்.வெங்கடேஷின் பாணி. நீங்கள் அறிந்த உலகத்தையே, உங்களுக்கு மலர்த்திக் காட்டும் இந்தச் சிறுகதைத் தொகுதி. ஆர்.வெங்கடேஷ் - கணையாழி இதழின் மூலம் அறிமுகமானவர். எழுதவந்து 34 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 2 கவிதைத் தொகுதிகள், 2 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுதிகள் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இராஜாஜி, ஆதவன் ஆகியோரது இலக்கிய பங்களிப்புகள் பற்றி, சாகித்ய அகாதெமிக்காக சிறுநூல்கள் எழுதியுள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வழங்கிய எழுத்துத் துறைக்கான ‘நம்பிக்கை நட்சத்திரம்’ விருது, கலைமகள் நாராயணசாமி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இது இவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுதி. எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். An Aurality audiobook production Author: R. Venkatesh Narrator: Pushpalatha Parthiban Publisher: Itsdiff Entertainment Title:

    Show More Show Less
    12 mins
  • சீனா படையெடுப்பும் அதன் பின்னணியும் Article 370 Indiyavin KAshmir
    Aug 23 2024

    காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? Description: மகாராஜா ஹரி சிங் எதன் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மிரை இணைக்க ஒப்புக்கொண்டார்? ஆர்ட்டிகிள் 370 என்பது என்ன? காஷ்மிருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது? காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? அதைப் பின்வாங்கிக் கொள்வது காஷ்மிருக்கு இழைக்கப்படும் துரோகமா? இந்தியாவின் காஷ்மிர் தனியாக ஒரு நாடு போல் இயங்க ஆர்டிகிள் 370 அனுமதித்ததா? ஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா காலம் தொடங்கி, இந்திய அரசியல் வரலாற்றில் காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து குறித்து நடந்த விவாதங்கள் என்ன? அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இந்தப் புத்தகம். பல்வேறு தரவுகளுடன், தொடக்கம் முதல் இறுதி வரை எங்கும் விலகிச் செல்லாமல், இந்தப் புத்தகத்தைக் கோர்வையாக, திறம்பட எழுதி இருக்கிறார் ஆர்.ராதாகிருஷ்ணன். எழுத்தாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: R. Radhakrishnan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    Show More Show Less
    17 mins
  • மகா விஷ்ணுவால் அருளப்பட்ட கருட புராணம் ஒரு கருவூலம் -புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள்
    Aug 23 2024

    Title: Karuda Puranam Subtitle: கருட புராணம் Karuda Puranam: - An Aurality Tamil Audio Book Production - http://aurality.app மகா விஷ்ணு பேசுகிறார். 'அறிவிற்சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்தபோது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப் புரிந்தீர்கள். அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்களானீர்கள். கிடைத்தற்கரிய மானுடப் பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காதவர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்களாகுவதற்கு முயற்சித்தீர்கள். பாவிகள், நிலையற்ற உடலை நிலையானது என்று பிரமையாக எண்ணி, பாவங்கள் செய்து, நரகத்தில் உழல்கின்றனர். நீங்களோ நிலைத்த சுகமான தேவநிலைக்காக நிலையற்ற உடலுக்கான சுகங்களைத் துறந்தீர்கள். காலையில் சமைத்தால் மாலையில் பாழாய்ப் போகும் அன்னத்தைப் புசிக்கும் மானுட உடல் மட்டும் பாழாய்ப் போகாமல் இருக்குமா என்ன? அதனால் உடலோடு இருக்கும்போதே கவனமாக நற்செயல் புரிந்து, தர்ம வழியில் நடந்து நரக வேதனையிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். இறைவன் அளித்த புலன்கள், செல்வம், அறிவு அனைத்தையும் நற்செயல்களுக்காகப் பயன்படுத்தினீர்கள். அதனால் புண்ணியமான இந்த இடத்தை வந்தடைந்தீர்கள். நீங்கள் இன்னும் சிறந்த புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள். வழியில் அனைவரும் உங்களை வழிபடுவார்கள்.' கருட புராணம் ஒரு கருவூலம். மகா விஷ்ணுவால் அருளப்பட்டது. இந்தப் பூமியில் பிறந்த மானுடர்கள் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வது. நல்ல ஆத்மாக்கள் எப்படி எம லோகத்தில் ஆனந்தமாக இருக்கும் என்பதையும், கெட்ட ஆத்மாக்கள் எம லோகத்தில் எந்த எந்தக் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதையும் விவரிக்கிறது கருட புராணம். இந்தப் புத்தகத்தில் சொல்லப்படாத கருத்துகளே இல்லை எனலாம். புல்லரிக்க வைக்கும் அழகுத் தமிழில் இந்த நூலை எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன். எழுத்தாளர் ராஜி ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம். Author: Raji Raghunathan Narrator: Bhavani Anantharaman Publisher: Book by Swasam Audio book by : Aurality/ Itsdiff Entertainment

    Show More Show Less
    8 mins
  • ராம் ஜென்ம பூமி - அயோத்தி (அ முதல் ஃ வரை) | Aurality tamil audiobook
    Aug 23 2024

    Listen to these and other wonderful tamil biography and historical content as audiobooks in Aurality app ( available on google play store and Apple store ) Aurality Infotainment Aurality முன்பெல்லாம் அயோத்தி என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ ராமன் எனும் பெயர்தான். ஆனால் 6 டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு, ‘சர்ச்சைக்குரிய இடம்’ என்றுதான் நினைவுக்கு வருகிறது. உண்மையில் அயோத்தியில் நடந்தது என்ன, நடப்பது என்ன என்பது குறித்த வரலாற்று உண்மைகள் பலருக்கும் தெரியவில்லை. அயோத்தியில் ராமர் அவதரித்தார் என்பதற்கான புராண ஆதாரங்கள் யாவை? பாபர் மசூதியின் வரலாறு என்ன? நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இந்தப் பிரச்சினையில் இருக்கும் சிக்கல்கள் யாவை? இந்தப் பிரச்சினையால் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை? அயோத்தி தொடர்பாக நடந்த வழக்குகள் எத்தனை? இறுதித் தீர்ப்பின் சாராம்சம் என்ன? இவை போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விளக்கமளிக்கிறது. இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வின் ஆதாரபூர்வ பதிவாக இந்தப் புத்தகம் இருக்கும். எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author: R. Radhakrishnan Narrator: Sri Srinivasa Publisher: Itsdiff Entertainment

    Show More Show Less
    11 mins