Episodes

  • Prayer for Healing: திருமுறை மருந்து - விஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம்
    Dec 28 2022
    ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே. 1 இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண் இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு இரண்டுகொ லாமவர் எய்தின தாமே. 2 மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண் மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே. 3 நாலுகொ லாமவர் தம்முக மாவன நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும் நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள் நாலுகொ லாமறை பாடின தாமே. 4 அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம் அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே. 5 ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே. 6 ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல் ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள் ஏழுகொ லாமிசை யாக்கின தாமே. 7 எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம் எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர் எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே. 8 ஒன்பது போலவர் வாசல் வகுத்தன ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை ஒன்பது போலவர் கோலக் குழற்சடை ஒன்பது போலவர் பாரிடந் தானே. 9 பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே. 10 இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம் நீங்கும்படி அருளிச்செய்தது.
    Show More Show Less
    5 mins
  • Prayer for Healing: திருமுறை மருந்து - விஷக்காய்ச்சல், விஷக்கடி, செய்வினை - பில்லி - சூனியம் கோளாறு நீங்கவும், குரல் வளம் பெறவும், இளைய சகோதரன் நலம் பெறவும், எந்தக் காரியத்திலும் வெற்றி பெறவும்
    Dec 28 2022
    அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 2 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 3 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 4 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 5 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப் பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 8 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 9 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 10 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண் திறம்பயில் ஞானசம் ...
    Show More Show Less
    9 mins
  • Prayer for Healing: திருமுறை மருந்து - குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து அனைவரும் மகிழ்வுடன் வாழ பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்
    Dec 14 2022
    மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணின்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. 1 போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே. 2 தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம் வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக் கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப் பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே. 3 அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங் கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப் பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே. 4 அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங் கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப் பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 5 மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும் பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே. 6 குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங் கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப் பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே. 7 அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப் பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே. 8 நெடியவன் பிரமனும் நினைப்பரி தாயவர் அடியொடு முடியறி யாவழல் உருவினன் கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப் பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. 9 தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம் ஆருறு சொற்களைந் தடியிணை யடைந்துய்ம்மின் காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப் பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே. 10 கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப் பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ் விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே. 11
    Show More Show Less
    8 mins
  • Prayer for Healing: திருமுறை மருந்து - திக்குவாய் கோளாறு நீங்கவும் பேச்சுத்திறமை மேம்படவும் ஓத வேண்டிய பதிகம்
    Dec 14 2022
    பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 1 என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 2 கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 3 அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 4 தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 5 அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 6 மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 7 கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 8 தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 9 தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 10 நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 11 கானார் புலித்தோல் ...
    Show More Show Less
    5 mins
  • Prayer for Healing: திருமுறை மருந்து - உணவும் உடையும் குறைவின்றி கிடைக்க பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்
    Dec 14 2022
    தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் சார்வினுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் இம்மையேதருஞ் சோறுங்கூறையும் ஏத்தலாமிடர் கெடலுமாம் அம்மையேசிவ லோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 1 மிடுக்கிலாதானை வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங்கொடுப் பாரிலை பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அடுக்குமேலம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 2 காணியேற்பெரி துடையனேகற்று நல்லனேசுற்றம் நற்கிளை பேணியேவிருந் தோம்புமேயென்று பேசினுங்கொடுப் பாரிலை பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண் புகலூர்பாடுமின் புலவீர்காள் ஆணியாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 3 நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல் நடுங்கிநிற்குமிக் கிழவனை வரைகள்போல்திரள் தோளனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அரையனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 4 வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப் பாவியைவழக் கில்லியைப் பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று பாடினுங்கொடுப் பாரிலை பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற் கியாதுமையுற வில்லையே. 5 நலமிலாதானை நல்லனேயென்று நரைத்தமாந்தரை இளையனே குலமிலாதானைக் குலவனேயென்று கூறினுங்கொடுப் பாரிலை புலமெலாம்வெறி கமழும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அலமராதமர் உலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 6 நோயனைத்தடந் தோளனேயென்று நொய்யமாந்தரை விழுமிய தாயன்றோபுல வோர்க்கெலாமென்று சாற்றினுங்கொடுப் பாரிலை போயுழன்றுகண் குழியாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7 எள்விழுந்திடம் பார்க்குமாகிலும் ஈக்கும்ஈகிலன் ஆகிலும் வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள் அள்ளற்பட்டழுந் தாதுபோவதற் கியாதுமையுற வில்லையே. 8 கற்றிலாதானைக் கற்றுநல்லனே காமதேவனை யொக்குமே முற்றிலாதானை முற்றனேயென்று மொழியினுங்கொடுப் பாரிலை ...
    Show More Show Less
    10 mins
  • Shiva Maanasa Pooja
    Jan 22 2022
    Lyric by Aadhi Shankara. Music by A R Rahman
    Show More Show Less
    5 mins
  • Kanakadhaaraa Sthothram
    Jul 25 2021

    Kanagadhara Stotram is a popular hymn, written by Sri Adhi Sankaracharya, praising Goddess Lakshmi. The stotram consists of 21 hymns, praising the goddess. The background, structure, and significance of reciting the stotra are discussed in this blog.

    LEGEND BEHIND THE STOTRA

    One day, as a young boy, Adhi Sankaracharya went to take Bhiksha to prepare his food. He came across a hut and asked the woman in the house Bhiksha (food). In those days, not offering food to a Brahmin, who comes to beg you, was considered to be unethical. So, the lady was upset because there was nothing edible in the house.

    After searching her house thoroughly, she could find only one gooseberry fruit. She hesitantly offered it to Sankara. Sankara, on seeing the plight of the woman, wanted to help her back. So he sang twenty-one hymns praising the supreme mother. As a result, Sri Lakshmi appeared before him. He asked the Goddess to grant riches to the poor woman.

    The Goddess initially refused to grant her riches, as it was the woman’s karma that made her poor. Sankara convinced her by saying that she is the supreme power to decide on one’s fate. Then convinced Sri Lakshmi showered the lady’s house with pure gold.

    HOW TO CHANT THE MANTRA?

    There are no specific rules to chant the mantra. Kanagadhara stotram is easier to learn by anyone. If one listens to the mantra with concentration, keeping a copy of the sloga to read, it might take not more than a week to grasp the tone of the stotra. The devotee needs just the following two, to chant the mantra.

    • Clean mind (Antha Soucham),
    • Clean body, clean place and clean clothes (Baahya Soucham).
    • The best time to chant the sloka is suggested to be early morning, after a bath.
    • Using pink flowers to worship the goddess, while chanting the stotra, is appreciable.
    • The stotra is short that it does not take more than 10-15 minutes to chant them.

    SIGNIFICANCE OF THE STOTRA

    • Like all the slokas, Kangadhara stotram helps you to have a peaceful life.
    • The stotra is specifically recited to attain wealth and prosperity in one’s life.
    • The stotra is said to provide also health benefits to those who chant them.
      Show More Show Less
      9 mins
    • Sundhara Kaandam
      Jul 25 2021
      Sundhara Kaandam
      Show More Show Less
      24 mins