• சிட்னியில் சட்டவிரோத மதுபான இறக்குமதி : இரு இந்தியர்களின் விசா ரத்து
    Mar 2 2026
    சிட்னியில் சட்டவிரோதமாக மதுபான இறக்குமதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
    Show More Show Less
    3 mins
  • What lies beneath Keeladi: The uneasy politics of India’s past - கீழடிக்குக் கீழே புதைந்திருப்பது என்ன? இந்திய அரசியலைக் கலங்கடிக்கும் கடந்தகாலம்
    Mar 2 2026
    Since its discovery in 2014, the Keeladi excavation near Madurai has emerged as one of India’s most contested archaeological sites – celebrated by some as evidence of an early urban civilisation in South India, and dismissed by others as an exercise in political mythmaking. In her latest book, The Dig: Keeladi and the Politics of India’s Past, journalist Sowmiya Ashok traces the accidental unearthing of this ancient settlement and the political storm that followed. Her journey moves across India’s archaeological landscape – from early Iron Age sites in Tamil Nadu to the Harappan site of Rakhigarhi in Haryana, and the lost port of Muziris in Kerala. Along the way, she speaks with archaeologists while enduring the blazing heat, clings to precarious platforms at a roaring jallikattu arena, and even samples fragments of ancient pottery at an excavation site. Sowmiya Ashok speaks to Kulasegaram Sanchayan about The Dig. - 2014ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, மதுரைக்கு அருகிலுள்ள கீழடி அகழாய்வு, இந்தியாவின் மிக அதிகமாக விவாதிக்கப்படும் தொல்லியல் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தென்னிந்தியாவில் ஒரு நகர்மயமான பண்டைய நாகரிகம் இருந்ததற்கான சான்று என சிலர் இதை போற்றினாலும், மற்றவர்கள் இதை அரசியல் நோக்கமுடைய வரலாற்றுக் கற்பனை என நிராகரிக்கின்றனர். இந்தப் பின்னணியில், The Dig: Keeladi and the Politics of India’s Past என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு நூலை வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் சௌமியா அஷோக், கீழடி என்ற பண்டைய குடியிருப்பு எவ்வாறு தற்செயலாக வெளிப்பட்டது என்பதையும், அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் புயலையும் விரிவாகப் பதிவு செய்கிறார். தமிழ்நாட்டின் இரும்புக் காலத்திற்குரிய ஆரம்பகால தளங்களிலிருந்து, ஹரியானாவின் ஹரப்பா நாகரிகத் தளமான ராக்கிகடி, கேரளாவின் மறைந்துபோன துறைமுக நகரமான முசிறி வரை – இந்தியாவின் பல தொல்லியல் நிலப்பரப்புகள் வழியே அவரது பயணம் விரிகிறது. அந்தப் பயணத்தில், கொளுத்தும் வெயிலில் அகழாய்வு தளங்களில் தொல்லியலாளர்களுடன் உரையாடுகிறார்; ஆர்ப்பாட்டமான ஜல்லிக்கட்டு அரங்கில் நடுங்கும் மேடைகளில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார்; அகழாய்வுத் தளத்தில் கிடைத்த பழங்கால பானைச் சில்லுகளையும் சுவைத்துப் பார்க்கிறார். ‘The Dig’ என்ற அவரது நூல் குறித்து, பத்திரிகையாளர் சௌமியா அசோக், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
    Show More Show Less
    19 mins
  • இன்றைய செய்திகள்: 02 மார்ச் 2026 - திங்கட்கிழமை
    Mar 2 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/03/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    5 mins
  • செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலிய சர்வதேச மாணவர்களை பாதுகாக்க ஒரு புதிய இணையதளம்
    Mar 1 2026
    ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க உதவும் வகையில், புதிய இணையதளம் மற்றும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.
    Show More Show Less
    7 mins
  • ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டார் – ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு மீண்டும் ஏறுமா?
    Mar 1 2026
    ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம், ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் மற்றும் அரசு தொலைக்காட்சி உட்பட பல அதிகாரப்பூர்வ உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்தப் பின்னணியில், ஈரானின் எதிர்காலம் என்ன என்று Arab News என்ற பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து வெளியாகும் Saudi Gazette in Jeddah என்ற பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியருமான எல். ராம்நாராயண் ஐயர் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show More Show Less
    13 mins
  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (21 – 28 பெப்ரவரி 2026)
    Feb 27 2026
    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (22– 28 பெப்ரவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி இன்பசேகரன்.
    Show More Show Less
    7 mins
  • தடுப்புக்காவலில் காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர் திலீவரனின் கதை
    Feb 27 2026
    தற்போது Villawood தடுப்பு மையத்தில் இருக்கும் திலீவரன் பகிர்ந்து கொண்ட கருத்துகளோடு, குடியேற்ற தடுப்பு மையங்களில் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடம் கோருவோரின் நிலை குறித்தும், அரசின் நிலைப்பாடு குறித்தும் விளக்கும் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show More Show Less
    17 mins
  • செய்தியின் பின்னணி: பிரதமரை சிக்கலில் மாட்டிய ஒரு வார்த்தை
    Feb 27 2026
    பிரதமர் இந்த வாரம் கூறிய ஒரு வார்த்தை அவரை பலத்த விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. அது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show More Show Less
    8 mins